எந்த உணவுக்கு எது நிவாரணம்?

4 weeks ago 7

நன்றி குங்குமம் டாக்டர்

சில நேரங்களில் நாம் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்டுவிட்டால் அவை சரியாக செரிமானம் ஆகாமல் வாயு தொந்தரவு மற்றும் வயிற்றுவலியை ஏற்படுத்தும். அதுபோன்ற சமயங்களில் அந்த உணவுக்கு மாற்று உணவை எடுத்துக் கொண்டால் பிரச்னை சரியாகும். அந்தவகையில் எந்த உணவுக்கு எதை மாற்றாக சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

நெய் சேர்த்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அதற்கு மாற்றாக ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சரியாகும்.மாங்காய், மாம்பழம் அதிகமாக சாப்பிட்டு விட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கலாம்.பலாப்பழம் அதிகம் சாப்பிட்டு விட்டால் அதற்கு மாற்றாக ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் சரியாகும்.

கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு நிவாரணமாக ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்.கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு, வெல்லம் சாப்பிடலாம். அல்லது சுக்கு காபி தயாரித்து குடிக்கலாம்.அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சோம்பு சிறிது சாப்பிடலாம். எளிதில் ஜீரணமாகும். தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும், தயிர்பச்சடி, ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்.விலகாத நோய் கூட விளாம்பழம் சாப்பிட விலகிப் போகும். காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும். உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டு ஜூஸ் அல்லது கறிகூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.வெட்டை சூடு தணிய வல்லாரை இலை, சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.

உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர், இளநீர், வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தி வர குணமாகும்.வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் சிறந்த நிவாரணமாகும். அல்லது தண்ணீர் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.

தொகுப்பு: ரிஷி

The post எந்த உணவுக்கு எது நிவாரணம்? appeared first on Dinakaran.

Read Entire Article