டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ: அசத்தலான கார்களை காட்சிப்படுத்தியுள்ள முன்னணி நிறுவனங்கள்

2 hours ago 2

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் முன்னணி நிறுவனங்கள் தனித்துவ வடிவமைப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அசத்தலான கார்களை காட்சிப்படுத்தியுள்ளது. டெல்லியில் வரும் 22ம் தேதி வரை நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களின் புதிய மடல்களை கான்செப்ட்களாகும், உற்பத்திக்கு தயாராக உள்ள எடிசன்களாகவும் காட்சிப்படுத்தியுள்ளன. அந்த வகையில் BMW நிறுவனம் தனது X1 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் 52 வகையான பாதுகாப்பு வசதிகளுடன் ரூ.18 லட்சத்தில் கிரெட்டா மின்சார காரையும், 10 சீட் கொண்ட சொகுசு வேன் போன்ற ஸ்டாரியா லக்ஸுரி காரையும் காட்சிப்படுத்தியுள்ளது. தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓடி கொண்டிருக்கும் ஸ்டாரியா காரின் விலை ரூ.70 லட்சம் ஆகும். ஆனால், இந்த கார் இந்தியா வருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. மாருதி சுசுகி தனது முழு எலெக்ட்ரிக் SUV மாடலான இ விட்டாராவை அறிமுகப்படுத்தி உள்ளது. சைபர்ஸ்டர் என்ற ஸ்போர்ட்ஸ் வகை மின்சார காரையும் M9 என்ற சொகுசு காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது MG நிறுவனம். டாடா மோட்டார்ஸ் ஹேரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்தது.

இது 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரிச்சயமான சியரா காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டும் அவினியா எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தியா நிறுவனம் EV6 Facelift என்ற மின்சார காரை எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், விலை குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகிறது. ஸ்கோடா நிறுவனம் கைலக் என்ற காரையும், எல்ராக் என்ற குளோபல் எலெக்ட்ரிக் காரையும் காட்சிக்கு வைத்துள்ளது. ஐரோப்பாவில் ஓடும் எல்ராக் கார் இந்தியாவுக்கு எப்போது வரும் என்று கார் பிரியர்கள் அவளோடு காத்திருக்கின்றனர்.

The post டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ: அசத்தலான கார்களை காட்சிப்படுத்தியுள்ள முன்னணி நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article