விழுப்புரம்: மணி நகரில் இட்லி கடையை சூறையாடியது, 2 முதியவர்களை தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிரசாந்த் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதாக புகார் எழுந்தது. சரத்குமார் என்பவர் வீட்டில் கல்வீசித் தாக்கிவிட்டு, வழியில் சென்ற 2 முதியவர்களையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உள்ளிட்ட 2 பேருக்கு போலீஸ் வலைவீசு வருகின்றனர்.
The post இட்லி கடை சூறை: பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.