சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், வழக்கறிஞர், ஊடக அணி என பல்வேறு அணிகள் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் அதில் திருநங்கைகள் அணிக்கான வரிசை எண் தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. 9ம் எண்ணில் அந்த அணி இடம்பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி திருநங்கை செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த ‘9’ என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும். நடிகர் விஜய், திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விஷயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா. இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவிகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post எத்தனை ஆண்டுகள் இழிவை சுமக்க வேண்டும் திருநங்கை செயற்பாட்டாளர் நடிகர் விஜய்க்கு கண்டனம் appeared first on Dinakaran.