எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது - ஜடேஜா வருத்தம்

2 weeks ago 5

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூரு, புனேயில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காய்ச்சலால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில் 31 ரன்களுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா கூறுகையில், "தனிப்பட்ட முறையில் நான் ஓய்வு பெறும் வரை இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை இழக்காது என்று நினைத்தேன். அந்த வகையிலேயே நாங்கள் தொடர்ச்சியாக 18 தொடர்களை இந்திய மண்ணில் வென்றோம். ஆனால் இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகவும் வருத்தம் அளித்து விட்டது. ஏனெனில் நான் ஓய்வு பெறும் வரை டெஸ்ட் தொடரை இந்திய அணி சொந்த மண்ணில் இழக்கக்கூடாது என்று நினைத்தேன்.

ஆனால் தற்போது அது நடந்து விட்டது. நாங்கள் எங்களின் மீது பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டோம். 12 ஆண்டுகளாக எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் விளையாடி வந்த நாங்கள் இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் 5 போட்டியில் மட்டுமே தோற்று இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இப்பொழுது இந்த தொடரில் அடைந்த தோல்வி எனக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம்" என்று கூறினார்.

Read Entire Article