புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. சோனியா காந்தி - ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு எம்பிக்களும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்று அவை கூடியதும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டன. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து பாஜக எம்.பி ராதா மோகன் தாஸ் பேசினார். பாஜக எம்.பியின் பேச்சுக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்.