சென்னை : எதிர்க்கட்சிகளின் பொய்களை முறியடித்து விண்வெளி தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதிப்பட தெரிவித்துள்ளார். விண்வெளி தொழில் கொள்கை குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இவ்வாறு கண்டனம் தெரிவித்தார். நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும் நிறுவனத்துடன் கோர்த்து பேசுவது அற்பமான செயல் என்றும் எந்த முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்துக்கும் இந்த கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் ராஜா குறிப்பிட்டார்.
The post எதிர்க்கட்சிகளின் பொய்களை முறியடித்து விண்வெளி தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி appeared first on Dinakaran.