எண்ணூர் முதல் கோவளம் வரை 8 கடற்கரைகளை உருவாக்க திட்டம்: சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தகவல்

4 months ago 18

சென்னை: சென்னை பெருநகரப் பகுதியில் வீட்டு வசதி மற்றும் அலுவலக வசதிக்கான தளங்களை அதிகரிக்க தேவையான இடங்களில் கட்டுமானத்துக்கான தளப்பரப்பு குறியீட்டை உயர்த்தி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், எண்ணூர் முதல் கோவளம் வரை 8 கடற்கரைகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா கூறியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், சென்னையை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான, சென்னை இன்ப்ரா நெக்ஸ்ட் 2024 என்ற கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. கருத்தரங்கில், தொழிற்பேட்டைகளை நவீனப்படுத்துவது தொடர்பான வெள்ளை அறிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டார். அப்போது அவர் பேசியது: "சென்னையை அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இந்திய அளவில் அல்லாது, உலகளவில் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. இதற்காக சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அரசும் இதற்காக பல்வேறு கொள்கைகளை தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கினாலும், திட்டமிடலுக்கான கொள்கை வகுக்கப்படவில்லை.

Read Entire Article