எண்ணூர், சாலிகிராமத்தில் உள்ள 2 ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் கும்பாபிஷேகம்: ஆன்மீக இயக்க தலைவர் செந்தில்குமார் பங்கேற்றார்

3 hours ago 1

மேல்மருவத்தூர்: சென்னை எண்ணூரில் கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் ஆகிய இரண்டு சித்தர் சக்தி பீடங்களின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 13ம் தேதி எண்ணூர், சாலிகிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் மங்கல இசை நடத்தப்பட்டது. 14ம் தேதி காலை கோபுர கலசங்கள் பதிய வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15ம் தேதி சக்தி கொடி ஏற்றுதல், முதல் கால வேள்வி பூஜை, மாலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை 3ம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 9 மணிக்கு எண்ணூரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழாவில் ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் கலந்துகொண்டு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். காலை 11 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்சக்தி பீடத்திற்கு சென்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இதன்பின்னர் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை செய்தார்.

சாலிகிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். ஏராளமான பொதுமக்களும் செவ்வாடை தொண்டர்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சாலிகிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை எண்ணூர் சித்தர் சக்தி பீட தலைவர் மாதவன், சாலிகிராம சக்தி பீட தலைவர் ராமசாமி ரெட்டியார் உள்பட பலர் செய்திருந்தனர்.

The post எண்ணூர், சாலிகிராமத்தில் உள்ள 2 ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் கும்பாபிஷேகம்: ஆன்மீக இயக்க தலைவர் செந்தில்குமார் பங்கேற்றார் appeared first on Dinakaran.

Read Entire Article