எடை குறைவான பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: பாவை அறக்கட்டளை வழங்கல்

4 weeks ago 8

 

பெரம்பலூர், டிச. 20: உடல் எடை குறைவாக உள்ள பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் பாவை அறக் கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மற்றும் லெப்பைக் குடிகாட்டில், பாவை அறக்கட்டளை சார்பில், உடல்எடை குறைவாக உள்ள பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்ப்பிணிகள் மற்றும் உடல் எடை குறைவாக உள்ள பெண்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக குன்னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்னம் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் செல்வக்குமார் மற்றும் மஹாலெட்சுமி சூப்பர் மார்க்கெட் ராஜா சிதம்பரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். லெப்பைக்குடிகாட்டில் நடந்த நிகழ்ச்சியில் லெப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்யா, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் அவர்களின் உடல்நலத்தில் கவனம் கொள்வதில்லை.

அவர்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் நேரம் ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களின் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டும். சத்தான உணவுப்பொருட்களை உண்ணுதல் வேண்டும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும். இதற்காக பெண்களின் நலனைக்கருத்தில் கொண்டு, அவர்களுக்காக பாவை அறக்கட்டளை பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியுள்ளது. அனைவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிறைவாக பாவை அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பிரியதர்ஷினி நன்றி தெரிவித்தார்.

The post எடை குறைவான பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: பாவை அறக்கட்டளை வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article