பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஜனவரி 15ம் தேதி ஒத்திவைத்தது. பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் (கடந்தாண்டு உடல்நல குறைவால் காலமானார்), சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் கடந்தாண்டு மார்ச் 14ம் தேதி புகார் மனு கொடுத்தார். அதில் 2.2.2024 அன்று காலை 11 மணி முதல் 11.30 மணி சமயத்தில் எனது மகளுக்கு முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதையேற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இவ்வழக்கு சிஐடி போலீசாரிடம் மாநில அரசு ஒப்படைத்தது. இப்புகாரில் சிஐடி போலீசார் முன் எடியூரப்பா ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். இந்நிலையில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யகோரி எடியூரப்பா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு நேற்று நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எடியூரப்பா தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். அதை தொடர்ந்து அடுத்த விசாரணையை ஜனவரி 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
The post எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு ஜன.15ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.