
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினர். அப்போது நாளை (திங்கட்கிழமை) எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அவருக்கு இருவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணிகள் தொடர்பாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்தும் இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பேசிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இருந்தனர்.