எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 5வது நாளில் ஐடி சோதனை நிறைவு

3 months ago 12

திருச்சி: எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 5வது நாளில் வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது. பென் டிரைவ், லேப்டாப் எடுத்துச்சென்றனர். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளிகள், முசிறி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில் வேளாண் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்தநிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண் பொறியியல் கல்லூரிகளில் கடந்த 22ம் தேதி 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவக்கினர். இதில் எம்ஐடி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். கடந்த 4 நாட்களாக கல்வி குழுமங்களில் சோதனை நடந்தது.நேற்றும் விடிய விடிய நீடித்த சோதனை 5வது நாளான இன்று காலை 7.30 மணியுடன் முடிந்தது.

இதில் வங்கி புத்தகங்கள், பென் டிரைவ், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கல்வி குழும பொறுப்பாளர்கள், பணியாளர்கள், ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கையெழுத்து பெற்று சென்றுள்ளனர். இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 5 நாட்களாக சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 5வது நாளில் ஐடி சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article