
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன.
அதன்படி, அதிமுக, பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. அமித்ஷா தலைமையில் இன்று அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானது.
இந்நிலையில், கூட்டணி உறுதியான நிலையில் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து வைக்கிறார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்த தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. கூட்டணி உறுதியான நிலையில் அமித்ஷா மற்றும் பாஜக, அதிமுக கட்சி நிர்வாகிகள் காரில் இபிஎஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.