எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு!!

19 hours ago 3

அமைச்சர் சேகர்பாபு: தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கோயில்கள், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 கோயில்கள் என மொத்தம் 22 கோயில்களில் இன்று ஒரே நாளில் குடமுழுக்கு நடைபெறுகிறது. 350-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மூலம் தமிழிலேயே குடமுழுக்கு நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அமைச்சர் துரைமுருகன்: சாத்தனூர் அணையில் புதிய சுற்றுலா மாளிகை கட்ட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும் என பதில் அளித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு: “இந்தியா முழுவதுமிலிருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகை தருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கொடைக்கானல் பகுதியில் மாற்றுப்பாதை பணிகள் ஆய்வு செய்துள்ளேன். திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதும் தேவைப்படும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

சிவகாசி எம்எல்ஏ அசோகன்: “சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்” என சிவகாசி எம்எல்ஏ அசோகன் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் தா.மோ. அன்பரன்: “புவிசார் குறியீடு பெற வேண்டுமானால் அந்த பொருள் குறிப்பிட்ட பகுதியில் தோன்றியிருப்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும். ஆனால், வரலாறு ஆவணங்கள் இல்லாததால் புவிசார் குறியீடு பெற சிரமம் உள்ளது. ஆவணங்கள் கிடைத்ததும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அமைச்சர் பதில் அளித்தார்.

The post எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு!! appeared first on Dinakaran.

Read Entire Article