
கும்பகோணம்,
கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
கடந்த 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். எந்தக் காரணத்தை கொண்டும் இந்தக் கூட்டணியை விட்டு விலகமாட்டோம். திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிக்க சனாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. அது நடக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம்.
ஏதோ அழுத்தம், மிரட்டல், அச்சுறுத்தல் என்கிறார்கள்.. என்னோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு தெரியும் என்னுடைய இயல்பு; என்னுடைய பண்பு. திருமாவளவன் திமுகவிடம் ஒன்று பேசிவிட்டு.. மறைமுகமாக ஒன்று செய்கிறார் என சிலர் கூறுகிறார்கள் அந்த அரசியல் எங்களுக்கு தெரியாது; அது எங்களுக்கு தேவையும் இல்லை. எனது நம்பகத்தன்மை மீது கை வைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.