ஊழல், கையூட்டு தொடர்பாக புகாரளிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம்

1 month ago 4


ஊழல் தடுப்பு மற்றும் கையூட்டு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். பேரவையில் நேற்று மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:
* சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் கட்டிடம் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ரூ.55 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
* தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் இளைஞர்களின் நலன் கருதி, கூடுதலாக சென்னை, அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் ஒரு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும்.

* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அவ்வியக்ககத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு இ-ஆபிஸ் திட்டத்தின் மூலம் தேவையான மூலதனச் செலவுகள் மேற்கொள்ளப்படும்.
* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் ஒரு கருவி வீதம் 46 குரல் பதிவு செய்யும் கருவிகள் ரூ.6.32 லட்சத்தில் வழங்கப்படும்.
* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் புலன் விசாரணை அலுவலர்களுக்கு 144 மடிக்கணினிகள் ரூ.99 லட்சத்தில் வழங்கப்படும்.
* ஊழல் தடுப்பு மற்றும் கையூட்டு தொடர்பாக பொதுமக்கள் தடையின்றி கட்டணமில்லா தொலைபேசி மூலம் எளிதாக புகார் அளிக்க ஏதுவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம் முதல்வரின் முகவரி துறையின் கீழ் ரூ.53.75 லட்சத்தில் அமைக்கப்படும்.

The post ஊழல், கையூட்டு தொடர்பாக புகாரளிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம் appeared first on Dinakaran.

Read Entire Article