ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் மூலம் குப்பைகளை சேகரிப்பது குறித்து மக்களுக்கான விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார்

3 months ago 4

சென்னை: வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், தகுந்த விழிப்புணர்வுகளை வழங்குவதற்காகவும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்ப திடக்கழிவு விழிப்புணர்வு குறித்த பாடல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை சேகரிக்க 8,315 மின்கல வாகனங்கள், மற்றும் 1,291 டிராக்டர்கள் மற்றும் 372 பிற வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அனைத்து ஊராட்சிகளிலும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்பிட ஏதுவாக இந்த பாடலை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி சென்னை, தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நேற்று வெளியிட்டார். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

The post ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் மூலம் குப்பைகளை சேகரிப்பது குறித்து மக்களுக்கான விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article