ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

1 week ago 4

 

சிவகாசி, ஏப்.10: விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்துக்கும் அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சிவகாசி யூனியன் அலுவலகத்தில் கிராம ஊராட்சி செயலாளர்கள், யூனியன் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூவநாதபுரம் ஊராட்சி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். செல்வம், தர்மர், காளிமுத்து முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article