ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ.177.85 கோடியில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்: முதல்வர் உத்தரவு, அரசாணையும் வெளியீடு

4 weeks ago 6

சென்னை: தமிழ்நாடு அரசு மாநில நிதித்திட்டத்தின்கீழ் 2024-25ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்த 17ம் தேதி இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதை திறம்படச் செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.

2024-25ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், முதலமைச்சரின் அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூ.177.85 கோடியில் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆணையின்படி, கோவை மாவட்டம், காரமடை வட்டத்தில் சிக்காரபாளையம் – கருப்பராயன் நகர் சாலை ஏலருமல்பள்ளம் ஆற்றில் ரூ.2 கோடியே 83 லட்சம் செலவில் ஒரு பாலம் உள்ளிட்ட மொத்தம் 34 பாலங்களை 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் 18 மாவட்டங்களில் கட்டுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ.177.85 கோடியில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்: முதல்வர் உத்தரவு, அரசாணையும் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article