ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

2 months ago 11

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்வுத்துறையின் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இம்மாதம் 20ம் தேதி வரை பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article