ஊனமுற்ற சாதனையாளர்களுக்கு கவின்கேர் எபிலிட்டி விருது: விண்ணப்பிக்க அழைப்பு

3 months ago 19

சென்னை: கவின்கேர் எபிலிட்டி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஊனம் இருந்தபோதிலும் தங்களது கனவுகளை தைரியமாக சாதித்த தனிநபர்களின் சாதனைகளை கவின்கேர் எபிலிட்டி விருதுகள் அங்கீகரித்து கௌரவிக்கின்றன. விருது பெறும் சாதனையாளர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பை மற்றும் அவர்களின் சாதனைகளைப் பாராட்டி பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது. கவின்கேர் எபிலிட்டி விருதுகள் கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் மற்றும் கவின்கேர் எபிலிட்டி மாஸ்டரி விருதுகளுக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. ஒரு நபரை ஒரு பிரிவிற்கும் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

இந்திய நாட்டை சேர்ந்த எந்த ஒரு ஊனமுற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களிலிருந்து தகுதியுள்ள நபர்கள், நேர்காணல்கள் மூலம் நிபுணத்துவமும் அனுபவமுமிக்க நடுவர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர்.
நவம்பர் 8ம் தேதி விருதுக்கு பரிந்துரை செய்ய கடைசி தேதி ஆகும். www.abilityfoundation.org அல்லது www.cavinkare.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலை அறிய 8939675544 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது, அதன் 22ம் ஆண்டு பயணத்தில், 95 ஊனமுற்ற சாதனையாளர்களை கௌரவித்துள்ளது என்று கவின்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஊனமுற்ற சாதனையாளர்களுக்கு கவின்கேர் எபிலிட்டி விருது: விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article