ஊத்தங்கரை வழியாக கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

1 month ago 5

ஊத்தங்கரை, டிச.13: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஊத்தங்கரை வழியாக திருவண்ணாமலை நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் வாகனங்களை கட்டுப்படுத்த, மாற்று பாதையில் அனுப்பி வருகின்றனர். இதில் குறிப்பாக திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக ஆற்காடு, வந்தவாசி சென்று பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில், கனரக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், ஊத்தங்கரை புறவழி சாலையில், சாலையோரம் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

The post ஊத்தங்கரை வழியாக கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article