ஊத்தங்கரை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்

3 weeks ago 6

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரியிலிருந்து மேல்மருவத்தூருக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து ஊத்தங்கரை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாருபட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு சுமார் 50 பெண்கள் ஏற்றி கொண்டு கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வீரியம்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் உட்பட 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பக்தர்கள் சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஊத்தங்கரை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article