மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொங்குசனீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலராக இருப்பவர் சேலத்தை சேர்ந்த ஜோதி (40). மன்னார்குடி ஒத்தைதெரு ஆனந்த விநாயகர் கோயிலில் கூடுதல் செயல் அலுவலராகவும் வேலை பார்த்து வருகிறார். திருக்கொள்ளிக்காடு கோயில் எழுத்தரான, நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியவேலூர் கிராமத்தை சேர்ந்த சசிக்குமாருக்கு (50) கடந்த 10 வருடங்களாக ஊதிய நிலுவைத்தொகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை பெற்று தர செயல்அலுவலர் ஜோதி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி புகாரின்படி திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.1லட்சத்துடன் சசிக்குமார் நேற்று மதியம் அந்த கோயிலுக்கு சென்று செயல் அலுவலர் ஜோதியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், செயல் அலுவலரை கைது செய்தனர்.
The post ஊதிய நிலுவை தொகை பெற ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் செயல் அலுவலர் கைது: திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.