தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஊட்டியில் நடக்கும் அரசு விழாவில், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் நேற்று ஊட்டிக்கு வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று இரவு ஊட்டியில் உள்ள நட்சத்திர ஹோடலில் திமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.