ஊட்டி : திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 9.69 சதவீதம் தமிழ்நாடு அரசு பொருளாதார வளர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி, உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும், விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி உட்பட பல்வேறு திட்டங்களை சிறப்பாக தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப்பிரச்சாரம் ஆகியவை நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி நகர திமுக சார்பில் நேற்று ஊட்டி நகரில் ஏடிசி மத்திய பஸ் நிலையம், ஐந்துலாந்தர் மற்றும் காபி அவுஸ் போன்ற பகுதிகளில் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
ஊட்டி ஏடிசி பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு, திமுக., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் முபாரக், மாவட்ட அவைத் தலைவர் போஜன், மாவட்டதுணை செயலாளர் ரவிக்குமார், தலைமை பொதுக்குழு உறப்பினர்கள் தொரை, சதுக்கத்துல்லா, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், தம்பி இஸ்மாயில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன் கலந்து கொண்டு அரசின் நான்கு ஆண்டுகள் சாதனையை பட்டியலிட்டார்.
தொடர்ந்து, கூட்டத்தில் பலரும் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், நகர அவைத் தலைவர் ஜெயகோபி, துணை செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், ரீட்டமேரி, பொருளாளர் அணில்குமார், கவுன்சிலர்கள் செல்வராஜ், கீதா, நாகமணி, மேரிபுளோரினா, பிரியா, கஜேந்திரன், ரகுபதி, நிர்வாகிகள் மஞ்சுகுமார், சசி, மகேஷ், காந்தல் ரவி, எல்க்ஹில் ரவி, ரகமத்துல்லா, புஷ்பராஜ், ஜெகதீஷ், காந்தல் சம்பத், தேவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஊட்டி நகர திமுக சார்பில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பிரச்சாரம் appeared first on Dinakaran.