உஷாராக இல்லாவிட்டால் உதிரி கட்சிகள் மேலே வந்துடும் 2026 சட்ட மன்ற தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? கலக்கத்தில் பேசிய கே.பி.முனுசாமி

2 months ago 14

அரியலூர்: அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது:  வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போன்றது.

அதிமுகவின் கவுரவம், எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் காக்க வேண்டும் என்றால் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றியை இழந்தால் முன்பு மாதிரி அரசியல் களம் தற்போது இல்லை. இப்பொழுது ஜாதி கட்சிகள் பல வந்துள்ளது. சுய முயற்சியில் சில கட்சிகள் வந்துள்ளன. இவ்வாறு வரும்போது வாக்காளர்களின் சிந்தனை மாறி வருகிறது. இரண்டு கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் நான்கு கட்சிக்கு வாக்களிக்க வேண்டி உள்ளது.

எனவே நாம் உஷாராக இல்லாமல் வெற்றி வாய்ப்பு இழந்தால் உதிரி கட்சிகள் மேலே வருவதற்கான வாய்ப்பு உண்டு. நமக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்த கட்சியை காப்பாற்ற வேண்டியது நமது தலையாய கடமை. அதற்காக எப்படி வேண்டும் என்றாலும் போராடலாம். தொண்டனும் உழைக்கிறான், செலவு என்று வரும்போது தொண்டனால் செலவு செய்ய முடியுமா முடியாது. காசு இருக்காது. நிர்வாகிகள் காசு கொடுத்து பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும்.

தேர்தலில் அனைவரும் செலவு செய்யணும், நிறைய பேர் ஷோக்காக டிரஸ் போட்டு கொண்டு எந்த வேலையும் செய்யாமல் வருவது எல்லாம் இனிமேல் இருக்கக் கூடாது. ஷோக்காக டிரஸ் போடணும்னா 2026 தேர்தலில் ஜெயித்தால் தான் முடியும். எனவே, அரியலூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். சீனியர், ஜூனியர் என்று பார்க்காமல் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post உஷாராக இல்லாவிட்டால் உதிரி கட்சிகள் மேலே வந்துடும் 2026 சட்ட மன்ற தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? கலக்கத்தில் பேசிய கே.பி.முனுசாமி appeared first on Dinakaran.

Read Entire Article