சென்னை: உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னையில் மே தின பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார் . மே தினத்தையொட்டி உழைப்பாளர் தின உறுதிமொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்.
தொழிலாளர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் என்று பெரியார் குறிப்பிட்டு காட்டினார். மே 1ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் பேரறிஞர் அண்ணா. அதன் பிறகு மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தார் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 28 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2400 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம் என்று மே தின பூங்காவில் நினைவுச்சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post உழைப்பாளர் தினம்: மே தின பூங்காவில் முதல்வர் மரியாதை appeared first on Dinakaran.