உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிக்க அதிமுக, காங்கிரஸ் எதிர்ப்பு: பேரவையில் இன்று விவாதிக்க முடிவு

3 weeks ago 5

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்டமுன்வடிவுக்கு அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. அந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 6ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், எல்லை மறுவரையறை செய்யும் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை அல்லது 2025ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வரை இவற்றில் எது முந்தியதோ அதுவரை அந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை சட்டமாக கொண்டு வரும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று சட்டமுன்வடிவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்மொழிந்தார். இந்த சட்டமுன்வடிவுக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டமுன்வடிவில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர். பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று இந்த சட்டமுன்வடிவு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

 

The post உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிக்க அதிமுக, காங்கிரஸ் எதிர்ப்பு: பேரவையில் இன்று விவாதிக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article