
சென்னை,
ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி, வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. அதிலும் தாய்மொழி சிறப்பு வாய்ந்தது. இதன் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் பிப்.,21ல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம் #தமிழ்_வெல்லும் என பதிவிட்டுள்ளார்.