
சென்னை,
தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைந்த பிறகு மத்திய மந்திரி அமித்ஷா கடந்த மாதம் மதுரைக்கு வருகை தந்தார். அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவேன் என்று கூறியிருந்தார்.
இதன்படி அமித்ஷா வருகிற 7-ந்தேதி சென்னையை அடுத்துள்ள காட்டாங் கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியானது.கட்சி கூட்டத்தில் பங் கேற்று விட்டு அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை பலப்படுத்துவதற்கான நட வடிக்கைகளிலும் அமித்ஷா ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
தனது சென்னை பயணத்தின் போது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவும் அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.இந்த நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்தாகி இருப்பதாக தகவல் கள் வெளியாகி உள்ளன.
பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவருக்கும் இடையே நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமித்ஷா சென்னை வரும் போது இருவரையும் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. ஆனால் இருவருமே சமாதானம் ஆகவில்லை. இதன் காரணமாகவே அமித்ஷாவின் சென்னை பயணம் ரத்தாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.