உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் லாரிகள் மூலம் மண் எடுத்துச்செல்வது தொடர்பாக பரபரப்பு ஆடியோ உளுந்தூர்பேட்டை பகுதி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ‘லாரிகள் மூலம் மண் அடித்தால் ரூபாய் 4,000 என்பது குறைவு என்றும், ஒரு நாளைக்கு 3 வண்டி என சொல்வார்கள். ஆனால், அதிக அளவில் வண்டிகள் மூலம் மண் அடிப்பார்கள். அதனால் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பிக்கு ரூபாய் 5,000 என பேரம் பேசி வாங்கித் தரவேண்டும்’ என்று உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பேசுகின்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு லாரிக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என மணல் கடத்தல்காரர்களுடன் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் பேரம் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தை தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவுபடி அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post உளுந்தூர்பேட்டையில் மண் எடுத்துச்செல்ல லாரிக்கு தலா ரூ.5 ஆயிரம் பேரம் பேசிய டிஎஸ்பி: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.