விழுப்புரம் : உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடத்தை உடனே தேர்வு செய்யும்படி அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கேட்டதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடத்தைத் தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார். நகராட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக வசதி செய்து தரவும் உத்தரவிட்டார்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு appeared first on Dinakaran.