உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2கி.மீ. தூரத்திற்கு காத்திருந்த வாகனங்கள்

4 months ago 15

 

உளுந்தூர்பேட்டை, ஜன. 12: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியாக உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார், லாரி என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் வரும் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடுவதால் தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு
செல்வார்கள்.

நேற்று காலை முதல் மதியம் வரை சுமார் 30,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 600 வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்வதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஆறு கவுன்டர்களில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில், நேற்று கூடுதலாக இரண்டு கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர் விடுமுறையால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2கி.மீ. தூரத்திற்கு காத்திருந்த வாகனங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article