
உலகின் அதிக வயதான பெண் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இனாஹ் கனாபாரோ லுகாஸ் என்பவர் கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு வாழ்ந்து வந்த இனாஹ் கனாபாரோ தனது 116 வயதில் காலமானார்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) இனாஹ் கனாபாரோ உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இனாஹ் கனாபாரோ மறைவுக்குப் பிறகு, உலகின் அதிக வயதான பெண் என்ற பட்டம், இங்கிலாந்தின் சர்ரேயைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர்ஹாமுக்குச் சென்றுள்ளது.