உலகளா​விய வர்த்தக மாற்​றங்​களால் இந்​தி​யா​வுக்கு பெரிய பாதிப்​பில்லை: துக்​ளக் ஆசிரியர் குரு​மூர்த்தி நம்​பிக்கை

3 hours ago 1

சென்னை: உலகளா​விய வர்த்தக மாற்​றங்​களுக்கு நடு​விலும், குறைந்த இழப்பை எதிர்​கொண்டு முன்​னேறும் ஆற்​றல் இந்​தி​யா​வுக்கு உள்​ள​தாக துக்​ளக் இதழ் ஆசிரியர் எஸ்.குரு​மூர்த்தி கூறி​னார். சாஸ்த்ரா நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகத்​தின் சார்​பில் 19-வது வி.​நா​ராயணன் நினை​வுச் சொற்​பொழிவு கருத்​தரங்​கம் சென்னை வடபழனி​யில் உள்ள அதன் வளாகத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற துக்​ளக் ஆசிரியர் எஸ்​.குரு​மூர்த்தி பேசி​ய​தாவது: தற்​போதைய சர்​வ​தேச அரசி​யல் மாற்​றங்​களால் உலகமய​மாதல் நடவடிக்​கைகளுக்​கான காலம் முடிவுக்கு வந்​து​விட்​டது. இந்​தியா போன்ற பெரிய நாடு​களை பொருத்​தவரை, பிற நாடு​களு​டன் வலிமை​யான நல்​லுறவை பேண முன்வர வேண்டும்.

Read Entire Article