உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம்

2 months ago 6

வாஷிங்டன் :உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற ட்ரம்பிற்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதனை கேட்ட ட்ரம்ப், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை உண்மையான நண்பனாக கருதுவதாகவும் இந்தியாவுடன் மீண்டும் சேர்ந்து செயல்பட ஆவலாக இருப்பதாகவும் கூறினார். வரும் நாட்களில் இருவரும் சேர்ந்து செயல்படுவது பற்றியும் நம்பிக்கை தெரிவித்தனர்.

முன்னதாக ட்ரம்பிற்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா,அமெரிக்கா இடையேயான உலகளாவிய கூட்டாண்மை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த ஆவலாக இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே ட்ரம்பிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சீன அதிபர் சஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article