உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

3 hours ago 4

மதுரை : நாளை உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடை மற்றும் இரண்டு மனமகிழ் மன்றங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், “மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிய கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FI.-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : டாஸ்மாக் கடைகள் அடைப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article