உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா மிக விமர்சையாக தொடங்கியது

4 hours ago 3

சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா மிக விமர்சையாக தொடங்கியது. ஜோடிக்கப்பட்ட ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர், சுவாமிகள் நான்கு மாட வீதிகளான தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிப்பு, மூலவரும் உற்சவருமான நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், கருவறையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது உலகத்தில் சிதம்பரத்தில் மட்டுமே நடைபெறக்கூடிய முக்கிய விழாவாக பார்க்கப்படுகிறது. நடராஜர் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் இந்த மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது.

இந்த தேரோட்ட விழாவில் பல்லாரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தேர்களை வடம் பிடித்து இழுத்து வரும் காட்சிகளை பார்க்க முடிகிறது. பாதுகாப்பு பணிக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஊர்க்காவல் படையினர் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா மிக விமர்சையாக தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article