உலகநாயகனுக்கு இன்று 70வது பிறந்தநாள்..

2 weeks ago 4
தமிழ்த் திரையுலகில் நீண்டநெடிய அனுபவம் கொண்ட நடிகர் கமல்ஹாசன்....ஆறுவயதில் ஆரம்பித்த அவர் பயணம் எழுபது வரை தொடர்கிறது. சிறு வயதிலேயே எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருபெரும் கதாநாயகர்களின் படங்களிலும் நடித்தவர் கமல்ஹாசன்... ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார் என கதாநாயகர்களாக நடித்த பலருடனும் கமல் இணைந்து நடித்துள்ளார் பாலசந்தரின் இயக்கத்தில் கமல் நடித்த பல்வேறு படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அபூர்வ ராகங்கள் மூலம் திரையுலகில் பலத்த போட்டியாக அறிமுகமானார் ரஜினிகாந்த் ஆடுபுலி ஆட்டம், 16 வயதினிலே , மூன்று முடிச்சு, அவர்கள், ((தாயில்லாமல் நானில்லை, அலாவுதீனும் அற்புத விளக்கும் ,))இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் இணைந்திருந்த கமல்- ரஜினி பின்னர் தனித்தனியாக ஏராளமான படங்களை ரசிகர்களுக்கு அள்ளித்தந்தனர்.. தமது படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை வார்த்த இயக்குனர்களின் அபிமானக் கதாநாயகனாக இருந்தார் கமல்ஹாசன்.. பலவிதமான கதாபாத்திரங்களில், பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் கமல்ஹாசன். மலையாளம், தெலுங்கு மொழிகளைத் தொடர்ந்து, இந்தியில் ஏக் தூஜேகே லீயே படத்தில் அறிமுகமான கமல்ஹாசனுக்கு சாகர், சனம் தேரி கசம் , யாத்கார் போன்ற படங்கள் இந்திய அளவில் புகழ் சேர்த்தன. தயாரிப்பாளர், இயக்குநர், கவிஞர், இயக்குனர், கவிஞர் என பன்முகத் தன்மை கொண்டவராகத் திகழ்கிறார் கமல்ஹாசன்.....
Read Entire Article