உலக பாரம்பரிய வாரத்தையொட்டி புராதன சின்னங்களை இலவசமாக இன்று பார்க்கலாம்

2 months ago 11

மாமல்லபுரம்: உலக பாரம்பரிய வார விழா ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் இன்று (19ம் தேதி) ஒருநாள் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post உலக பாரம்பரிய வாரத்தையொட்டி புராதன சின்னங்களை இலவசமாக இன்று பார்க்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article