சென்னை: உலக தாய்மொழி தினத்தை ஒட்டி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழ் வாழ்க என்று வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை திணிப்பிற்கு கடும் எதிர்ப்பை தமிழகம் தெரிவித்து வருகிறது. இதனை அடுத்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பை வலுவாக காட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் தமிழ் வாழ்க என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகள் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ஊர்களுக்கான பெயர் வைக்கப்பட்டிருக்கும் அதில் முதலில் தமிழ் அடுத்ததாக இந்தி இருக்கும் அத்தகைய இந்தி எழுத்து அளிக்கப்பட்டு அதற்கு மேலாக தமிழ் வாழ்க என்ற சுவரொட்டிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
அண்ணாசாலை, பல்லாவரம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக செல்லும் இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்தியை திணிக்கக்கூடாது மும்மொழி கொள்கை வேண்டாம். இருமொழி கொள்கையே போதும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் உறுதிப்பட தெரிவித்து வரும் நிலையில் தங்களுடைய எதிர்ப்பை தரும் விதமாக தமிழ் வாழ்க என்பதை சென்னை மற்றும் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டது.
The post உலக தாய்மொழி தினத்தை ஒட்டி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள்..!! appeared first on Dinakaran.