பாடாலூர்,பிப்.22: பாடாலூர் காவல் நிலையத்தில் உலகத் தாய்மொழி தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது. தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகத் தாய்மொழி தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் காவல் நிலையத்தில் உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமை வகித்தார். இதில் உலக தாய்மொழி தின உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
The post உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.