
தோகா,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 11-9, 8-11, 6-11, 5-11, 2-11 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுதாசினியிடம் தோற்று வெளியேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஹிகா-சுதிர்தா முகர்ஜி இணையும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மானவ் தாக்கர்-மனுஷ் ஷா ஜோடியும் வெற்றி பெற்றது.