உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

4 hours ago 3

கேப்டவுன் ,

2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.அதேவேளையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும்.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி:

பவுமா , டி சோர்ஜி, மார்க்ரம், முல்டர், ஜான்சன், ரபாடா, மஹராஜ், என்கிடி, போஷ், வெர்ரேய்ன், பெடிங்ஹாம், ஸ்டப்ஸ், ரிக்கல்டன், முத்துசாமி , பேட்டர்சன்.

Read Entire Article