உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்: புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் சரிவு

3 weeks ago 6

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இந்த வெற்றியால் தென்ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.

இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (66.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (58.89 சதவீதம்), இந்தியா (55.88 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.

நியூசிலாந்து (48.21 சதவீதம்), இலங்கை (45.45 சதவீதம்), இங்கிலாந்து (43.18 சதவீதம்), வங்கதேசம் (31.25 சதவீதம்) அணிகள் அடுத்த 4 இடங்களில் உள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

The post உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்: புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article