உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

4 months ago 18

சென்னை,

சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று தமிழக வீரரான குகேஷ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், 22 வயதில் இந்த பட்டத்தை வென்று சாதனை படைத்த கரீ காஸ்பரோவின் நீண்ட நாள் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த நிலையில், உலகின் இளம் வயது செஸ் சாம்பியன் குகேஷ், சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பியுள்ள குகேஷுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன், சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை வீட்டிற்கு செல்வதற்காக குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு கார் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.   

 

Read Entire Article