சென்னை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ஆண் – பெண் வேறுபாடின்றி சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: இந்நாளில் செவிலியர்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிக்கும் மருத்துவ துறையில் பணியாற்றும் அனைவரின் சேவைகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கருணை, தியாகம், அன்பு, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் அடையாளமாக திகழ்பவர்கள் செவிலியர்கள். மருத்துவர்கள் அளிக்கும் மருத்துவத்தைத் தாண்டி இவர்கள் காட்டும் அன்பும், அக்கறையும்தான் மனிதர்களைக் குணப்படுத்துகின்றன. உலக செவிலியர் நாள் கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நோயாளிகளின் தன்மை அறிந்து, இடம் அறிந்து, காலம் அறிந்து அவர்களைத் தேற்றும் கடமை ஆற்றுவதற்கு, எல்லையற்ற பொறுமை வேண்டும். இத்தகைய புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள அணைவருக்கும் செவிலியர் நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன்.
The post உலக செவிலியர் தினம் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.