அன்னவாசல் அருகே புதிய பகுதி நேர நியாய விலைக்கடை

4 hours ago 3

விராலிமலை, மே 13: அன்னவாசல் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலை கடையை அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.சந்திரன் நேற்று திறந்து வைத்தார். அன்னவாசல் அடுத்துள்ள வயலோகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் 685 குடும்ப அட்டைகளுடன் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வயலோகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காண்டாப்பட்டி, முதலிபட்டி, வேளாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் வந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளதாகவும், இதனால் காலவிரயம் ஏற்பட்டு ஒரு நாள் பணிக்கு செல்ல முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதால், பகுதிநேர நியாயவிலை கேட்டு, வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மற்றும் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.சந்திரன், பொது விநியோகத் திட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் வயலோகத்தில் உள்ள நியாய விலை கடையில் இருக்கும் 685 குடும்ப அட்டைகளை பிரித்து, முதலிபட்டியில் 171 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை நேற்று திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன், கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அன்னவாசல் அருகே புதிய பகுதி நேர நியாய விலைக்கடை appeared first on Dinakaran.

Read Entire Article